கோத்தபாய தலைமையிலான அமைப்பு நமக்குத் தேவையில்லை – வாசுதேவ…

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை வீழ்த்தி விட்டு யாரேனும் முன்னேறிச் செல்வார்களாயின் அதற்கு இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணியால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்தை வெளியிட்டிருந்தார்.

“புதுப்பிக்கப்பட்ட மஹிந்த சிந்தனையே தற்போது தேவை நாட்டுக்கு ஆனால், வியத் மக என்ற கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அமைப்பு அல்ல. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவருக்கு மஹிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நிகரான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய எவரும் இல்லை..” எனவும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.