முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜூலை 03ம் திகதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யாது விசாரணை செய்ய முடியும் என, மேன்முறையீட்டு நீதிமன்று, நிதிமோசடி விசாரணைகளுக்காக காவற்துறைப் பிரிவுக்கு இன்று(05) அறிவுறுத்தியுள்ளது.
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோத்தபாயவினால் கடந்த நவம்பர் 28 இல் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma