கோத்தவுக்காக பொய்சாட்சியமளித்த முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக வழக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் பொய் சாட்சி கூறிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரிய ஊழல்,மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவுக்கு எதிராகவே கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான அதீதமான கௌரவம் காரணமாக தான் உண்மையை மறைத்ததாக காமினி ஜயசுந்தர ஆணைக்குழுவில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.