(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போது வேட்பாளராக களமிறங்கவுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தான் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
“.. பதுளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலிருந்து நான் நீக்கப்பட்டிருப்பதாக என்று கூறப்பட்டாலும், நான் ஒருபோதும் குறித்த கட்சியின் உறுப்பினராக இல்லாததால் அத்தகைய நடவடிக்கை தேவையற்றது. தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பெயரளவிலான பதவிகளை விட்டு விலகி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான அதிருப்தியினால், அப்போது நான் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்தேன். ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி எனக்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக, கோத்தாபய ராஜபக்ஷ இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன். எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி பெயரிடவுள்ள வேட்பாளரை நான் எதிர்க்கிறேன்.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை உள்ளது. தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நானும் கூட தகுதியானவன் தான். அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்..”