கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சுனில் ஹந்துன்னெத்தி

மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கோப் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.

அது தொடர்பான அறிக்கைக்கு கோப் குழு அனுமதி வழங்கியுள்ளதுடன் அறிக்கையானது நாளை(28) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்று(26) கோப் குழுவின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றருந்தது.

ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கோப் குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக, பிரதி அமைச்சரும் கோப் குழுவின் உறுப்பினருமான ஹர்ச டி சில்வா தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய வங்கியின் முறி விநியோக முறைக்கேடு குறித்து கடந்த 18 மாதங்களாக இடம்பெற்ற விசாரணை நேற்றுடன் நிறைவடைந்ததாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும்  தெரிவித்துள்ளார்.