மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், எதிர்வரும் 24ஆம் திகதியன்று, இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த விவாதமானது காலை 9.30 – இரவு 7.30 வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.