முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்பில் முன்வைக்கப்படும் மத்திய வங்கி முறி விவகாரம் குறித்த குற்றச்சாட்டுக்கு அவரே பொறுப்புச் சொல்ல வேண்டும் என அரச விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக் குழு(கோப்) தீர்மானித்துள்ளது.
கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கைக்கு குழுவிலுள்ள பெரும்பான்மையானவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
குறித்த இந்த அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதாக கோப் குழு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த அறிக்கைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் கோப் குழு பிரதிநிதிகளான கலாநிதி ஹர்ஷத சில்வா, அஜித் பீ. பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஹேக்டர் அப்புஹாமி, ஹர்ஷன ராஜபகருன ஆகியோர் வாக்களித்துள்ளனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கோப் குழு உறுப்பினர்கள் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி எம்.பி. இந்த அறிக்கையை நேற்று(21) கூடிய கோப் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.