நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 8- ஆம் திகதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர்.
9- ஆம் திகதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.
சௌந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்தடிரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணத்தை தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.





