கோஹ்லியின் காதலிக்கு பாலியல் தொல்லை…

கோஹ்லியின் காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தன்னை கண்ட இடங்களில் தொட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியபோது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அனுஷ்கா, கரண் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதை கூறியதற்கு நன்றி என்றும் ஆனால் கரண் மீது பாலியல் தொல்லை தொடர்பாக புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தாக கூறியுள்ளார்.

மேலும், தன்னை மட்டுமின்றி நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் தொட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.