ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது இன்று(19) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.
இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ள நிலையில், இந்திய அணியில் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சற்று பின்னடைவாக இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சர்கள் கூறி வருகின்ற போதிலும், இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமது தெரிவிக்கையில்;
“.. இந்தியா அணிக்கு விராட் கோஹ்லி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே இருக்கின்றது. விராட் கோஹ்லி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோஹ்லி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன். இந்திய அணியின் துடுப்பாட்டம் மிக வலுவானது எனவே, இந்தப் போட்டி சவாலானதாக இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும்..”.