பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியில் இந்திய வீரர் விராட் கோஹ்லிக்கு அதிக ரசிகைகள் இருப்பதாக அந்த அணியின் தலைவி சனா மிர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களும், ரசிகைகளும் அதிக அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள வீராங்கனைகளில் பாதி பேர் விராட் கோஹ்லியின் ரசிகைகள் தானாம். இந்த ரகசியத்தை அந்த அணியின் தலைவி சனா மிர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சனா மிர் கூறுகையில், “எங்கள் அணியில் கோஹ்லி, டோனி பற்றி பேச்சு வராமல் இருக்காது. எனக்கு தனிப்பட்ட முறையில் டோனியைப் பிடிக்கும்.
அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அருமையான அணித்தலைவர். இளம் வீரர்களை கொண்ட அணியை அனுபவ அணியாகவும், சிறந்த அணியாகவும் மாற்றியுள்ளார்.
ஆனால் நான் என்ன தான் டோனியைப் பற்றி பாராட்டி பேசினாலும், எங்கள் அணியில் கோஹ்லிக்கு தான் அதிக ரசிகைகள் உள்ளனர்” என்று கூறியுள்ளார்