ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 44 ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 144 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரரான கெய்ல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் கோஹ்லியுடன் சேர்ந்து குஜராத் அணியின் பந்துகளை சிதறடித்தனர்.
கோஹ்லி 55 பந்தில் 109 ஓட்டங்களை 5 பவுண்டரி, 8 சிக்சர் உள்ளடங்களாக பெற்று கொண்டார்.
டிவில்லியர்ஸ், ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 10 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் சதம் விளாசி 129 ஓட்டங்களை குவித்தார்.
20 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு பெங்களூர் அணி 248 ஓட்டங்கள் குவித்தது.
கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இணைந்து 229 ஓட்டங்களை பெற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.