க.பொ.த உயர் தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் இம்முறை ஓகஸ்ட் மாதம்…

இம்முறை கல்விப் பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகள் முறையே ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ளன.

2,230 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , 3,014 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)