சகலதுறை ஆட்டக்காரர்களின் படுபோக்கே தோல்விக்கான காரணம் – சந்திமால்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் சர்வதேச போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

இப் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளானதை தொடர்ந்து, உப தலைவர் தினேஷ் சந்திமல் அணியின் தலைவராக செயற்பட்டார்.

இந்நிலையில், போட்டியின் தோல்வி குறித்து தினேஷ்  சந்திமல் கருத்து தெரிவித்த போது “நேற்றைய போட்டியில் தமது அணியில் சகலதுறை வீரர்கள் சிறப்பாக செயற்படாமையே, போட்டியின் தோல்விக்கு காரணம் என சுட்டிக்காட்டினார்”.

[youtube url=”https://www.youtube.com/watch?v=-gqFyZ8bZ8g” width=”560″ height=”315″]