பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இன்றும் (13) நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இன்று நண்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக அவ்வூழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையையடுத்து நல்லதொரு முடிவு கிடைக்கப் பெறாதுவிடின் எதிர்வரும் 27 ஆம் திகதியும் முழுமையான ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அத்தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.