‘சகல விலங்குகளும் தண்டனைக்கு அஞ்சுகிறது’ என்ற தொனிப்பொருளின் கீழ் பொசன் வாரம் பிரகடனம்

(FASTNEWS | COLOMBO) – பொசன் பண்டிகையை முன்னிட்டு ‘சகல விலங்குகளும் தண்டனைக்கு அஞ்சுகிறது’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று(12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பொசன் வாரத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பொசன் வாரத்தை முன்னிட்டு நாளை(13) இரவு முதல் சகல மாவட்ட செயலாளர் காரியாலங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் புண்ணிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சகல அரச நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களில் பௌத்த கொடியை பறக்கவிடுமாறும் குறித்த அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.