ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ச நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே இவ்வாறு கோட்டாபய ராஜபக்ச கலந்துக்கொண்டுள்ளார்.
பொது மக்களின் எதிர்ப்பினை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் பொது நிகழ்வுகளை புறக்கணித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ச பொது வெளி நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ளும் நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

