சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை (VIDEO)

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதனை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான UGS வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7.2 ரிக்டர் அளவுகோலில் குறித்த இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=MDAfsA_CSmQ” width=”560″ height=”315″]