சங்காவினால் டாக்கா டைனமிட்ஸ் அணி ஏமாறினாலும் மெஹடி’யினால் வெற்றி..

வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் டாக்கா டைனமிட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த 13வது லீக் ஆட்டத்தில் டாக்கா டைனமிட்ஸ்- கோமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் சேர்த்தது.

தொடக்க வீரர் சங்கக்காரா (20) ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க வீரரான மெஹடி மரூஃப் அதிரடியாக விளையாடி அரைசதம் எடுத்தார்.

அவர் 39 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி என மொத்தம் 60 ஓட்டங்கள் குவித்தார். நசீர் ஹொசைன் (43), அணித்தலைவர் சாஹிப் (24) ஆகியோரும் அதிரடி காட்டினர்.

கோமிலா விக்டோரியன்ஸ் அணி சார்பில், ரசிட் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கோமிலா விக்டோரியன்ஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறியது.

கடைசியில் களமிறங்கிய அணித்தலைவர் மொர்டசா அதிரடி காட்டினார். அவரும் 47 ஓட்டங்கள் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்த அணியால் 20 ஓவரில் முடிவில் 9 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டாக்கா அணி வெற்றி பெற்றது.

டாக்கா அணி சார்பில், முகமது சாகிட் 3 விக்கெட்டுகளையும், பிரசன்னா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள டாக்கா அணி 3ல் வெற்றி, 1ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.