சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று(03) நடைபெற்றது. குறித்த இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
போட்டியின் 45 ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திரா சாஹல் வீசினார்.
இந்த ஓவரின் கடைசி பந்தில் இலங்கை வீரர் தனஞ்ஜயவை டோனி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார்.
இந்த ஸ்டம்பிங் மூலம் டோனி 100 ஸ்டம்பிங் செய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மட்டுமின்றி இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
300-வது போட்டியிலேயே குறித்த சாதனையை படைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
டோனிக்கு அடுத்தபடியாக உள்ள சங்ககாரா மொத்தம் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார். அவர் 360 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை செய்து இருந்தார். டோனி 301 போட்டிகளிலேயே ஸ்டம்பிங்கில் சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)