பாகிஸ்தானில் நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் கராச்சி கிங்ஸ் அணி வெற்றியினை ஈட்டியுள்ளது.
பாகிஸ்தானில், பாகிஸ்தான் பிரீமியர் லீக் (PSL) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம்(26) நடந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற கடினமான கட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி களமிறங்கியது.
கராச்சி கிங்ஸ் அணியும், இஸ்லாமாபாத் அணியும் நேற்றுமுன்தினம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினர். இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இஸ்லாமபாத் அணிக்கு ஸ்மித் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்தணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் குவித்தது.
இஸ்லாமபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மித் 49 ஓட்டங்களும் ஹாடின் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
கராச்சி கிங்ஸ் அணி சார்பில் அமீர், சொகைல் கான் மற்றும் உஷ்மான் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இரண்டாவதாக துடுப்படுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் கெய்ல் மற்றும் அசாம் அதிரடி ஆட்டத்தை காட்ட அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
அசாம் 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சங்ககாரா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கெய்ல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 17 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஆட்டத்தி பரபரப்பு தொற்றியது. அடுத்து வந்த பொல்லார்டு தன் பங்கிற்கு அதிரடி காட்ட இறுதியாக கராச்சி கிங்ஸ் அணி 14.5 ஓவரில் 127 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கராச்சிகிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று முதல் குவாலிபையர் சுற்றில் பெஷாவர் ஷல்மி – குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மார்ச் 1 ஆம் திகதி நடக்கும் 2-வது குவாலிபையரில் இஸ்லாமாபாத் யுனைடெட் – கராச்சி கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
[youtube url=”https://www.youtube.com/watch?v=zorev6Q8kGg” width=”560″ height=”315″]