முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.
புனேயில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை அணியின் பந்துவீச்சு முதல் போட்டியில் அபாரமாக இருந்தது.
போட்டி முடிந்த பிறகு இலங்கை அணி வீரர்கள் உடைமாற்றும் அறையில் கேக் வெட்டி வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த வெற்றி குறித்து சங்கக்கார டுவிட்டரில் கூறுகையில், சிறப்பான வெற்றி. வலிமையான மற்றும் அனுபவ அணியை வீழ்த்திவிட்டீர்கள். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை வென்று விடலாம்.
மேலும், இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




