சங்காவின் 15 வருட சாதனையை முறியடித்த குசல் மற்றும் அசேல…

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரவின் சாதனையை இலங்கை அணியின் வீரர்கள் சுலபமாக முறியடித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் மற்றும் T-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டிகள் தற்போது காலியில் இடம் பெற்று வரும் நிலையில், சங்கா மற்றும் டி சில்வா ஆகியோரின் 15 வருட சாதனையினை முறியடித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் சங்கா மற்றும் டி சில்வா ஆகியோர் 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்று இருந்தமையை இலங்கை அணியின் சாதனையாக இருந்தது.

குறித்த சாதனையினை குஷால் மெண்டிஸ் மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் 196 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சாதனையினை முறியடித்துள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் குஷால் மெண்டிஸ் 166 ஓட்டங்களை அட்டமிழக்காமல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.