ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விட சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணித் தலைவராக இருக்கும் போது அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அர்ஜூன ரணதுங்க முதலிடத்தில் உள்ளார்.
அர்ஜுன ரணதுங்க அணித்தலைவராக இருக்கும் போது மொத்தம் 8726 ஓட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாமிடத்தில் மஹேல ஜெயவர்தனே 7456 ஓட்டங்களுடனும், மூன்றாவது இடத்தில் சனத் ஜெயசூர்யா 6554 ஓட்டங்களுடனும் உள்ளனர்.
பட்டியலில் நான்காவது இடத்தில் மேத்யூஸ் 6054 ஓட்டங்களுடனும், ஐந்தாவது இடத்தில் குமார் சங்ககாரா 4009 ஓட்டங்களுடனும், ஆறாவது இடத்தில் மார்வன் அத்தபத்து 3175 ஓட்டங்களுடனும் அங்கம் வகிக்கிறார்.