(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவுக்கு தப்பிச் சென்று தமிழக பொலிஸாரிடம் சிக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்கா என்பவர், நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புளுமெண்டல் சங்கா என்ற சங்க சிரந்த, சப்ரால், ரியாஸ் ஆகிய பாதாள உலகக்குழு உறுப்பினர்களை ராமேஸ்வரம் பொலிஸார் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் குற்றவாளியான தொமட்டகொடை சமிந்த என்பதை அழைத்து சென்ற சிறைச்சாலை பேருந்து மீது தெமட்டகொடை பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் புளுமெண்டால் சங்கா எனக் கூறப்படுகிறது.
தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சங்கா உள்ளிட்டோர் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சங்கா, படகு ஒன்றுக்கு பணம் செலுத்தி, இலங்கைக்கு தப்பி வந்துள்ளார்.
சங்க கடந்த வருடம் பல முறை படகு மூலம் தமிழகத்திற்கு சென்று வந்துள்தளாக தமிழக பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடும் மதுபோதையில் கிராண்ட்பாஸ் 75 தோட்டத்தில் உள்ள குடி பொட்டி என்ற பெண்ணை தேடிச் சென்றுள்ளார். என புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.