சங்கைக்குரிய கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்..

சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சரவை குழுவுடன் கலந்துரையாடுவதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.