சசிகலாவின் நிறுவனங்கள் உட்பட, தமிழகத்தை சேர்ந்த, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பதிவை, மத்திய அரசு இரத்து செய்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500, ரூ.1,000 தாள்கள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் இவற்றை வங்கிகளில் வைப்புச் செய்ய அளிக்கப்பட்ட 50 நாள் அவகாசத்தின்போது 2,138 போலி நிறுவன கணக்குகளில் மொத்தம் ரூ.1,321 கோடி வைப்பு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதவேளை சுமார் 2.1 லட்சம் போலி நிறுவன பதிவுகளை மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 578 இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்துள்ளதுடன் இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிற நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேவேளை பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அரண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை சசிகலா நடத்திய போலி நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.