சசிகலாவுக்கு 5 நாள் பரோல்…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் பரோல் அளித்துள்ளனர்.

தனது கணவர் நடராஜனை கவனிப்பதற்காக தனக்கு 15 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று சசிகலா மனு செய்திருந்தார். இந்நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி பெங்களூரு சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ள சென்னை பொலிசார், அவர் சென்னையில் தங்கியிருக்கும்போது அரசியல் கூட்டம் எதிலும் பங்கேற்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளனர்.