சஜித்திடம் இருந்து கோட்டாவுக்கு சவால்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொள்கைகள் மற்றும் எதிர்வரும் தூர நோக்கு தொடர்பிலான விவாதமொன்றுக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

வலிமையான வேட்பாளர் எனின் எதிரணியுடன் ஒரே மேடையில் எதிரணி வேட்பாளருடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சஜித் பிரேமதாச அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.