சஜித்தின் குருநாகல் பேரணிக்கு ரணில் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருநாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பேரணியை நடத்த வேண்டாம் என, கட்சியின் தலைவர் ஊடாக ஏற்பாட்டு குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கட்சி தலைவரின் ஆலோசனையை பின்பற்றாமல் குருநாகல் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்காரணமாக, குருநாகலில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் தான் கலந்துக்கொள்ள போவதில்லை என, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.