(FASTNEWS | COLOMBO) -சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறை நகரில் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
அன்றைய தினம் மாலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த செயற்பாட்டுக்கு சஜித் மற்றும் மங்களவின் கூட்டத்தை குழப்பும் வகையில் பிரதமர் அந்த விருந்தை நடத்தியுள்ளதாக ஒரு தரப்பினரால் குற்றம் சுமத்துகின்றனர்.
இதற்கு பதில் தெரிவித்த பிரதமரின் பேச்சாளர் பிரதமரினால் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.