(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிக்குமாறு கோரி, மாத்தறையில் எதிர்வரும் 23ஆம் திகதி பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேரணியானது, மாத்தறை- சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான ஏற்பாடுகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.