சஜித் ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுக்கு பின்னர் வெளியான தகவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் சஜித் பிரேமதாஸ சற்றுமுன்னர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் பெரும் திரளான ஆதரவாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

இதேவேளை, இன்று செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்த வாரத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.