சஜித் – பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பில் முக்கிய தீர்மானங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று(14) இடம்பெற்றது.

இதில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எரான் விக்ரமரட்ன ஆகியோர் அதில் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னரே அவற்றை பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.