சஜித் பின்வாங்க நேரிடும்; முடிவை நோக்கி ​செல்கிறது ஐ.தே.க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சஜித் பிரேமதாசவிற்கு பின்வாங்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என கூறுகிறார் என்றால், ஒன்று அவர் போட்டியிடுவார் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவார்.

அதிகார போட்டி அக்கட்சியின் முடிவை நோக்கி கொண்டு செல்வதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரண்டு பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அது எமது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.