சஜித் மற்றும் ரணில் பற்றி தகவல்களை வெளியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய இடங்களை கைப்பற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தாய் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் சஜித் தலைமையிலான அணி கூட்டணியொன்றை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பனிப்போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு கட்டமாக முக்கிய கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்றி ரணில் மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் மற்றும் ரணில் பற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறுவிடயங்களை வெளியிடவுள்ள அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.