சஜித் வெற்றிபெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்குள் செல்லும் பிரதமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும், இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள் செல்லும் நிலையேற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இன்று காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வில் வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், அனைத்து மதங்களையும் பாதுகாத்து, முன்நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்கத்தக்க வேட்பாளர் சஜித் பிரேமதாசவே ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.