சஜின் வாஸின் கையெழுத்து மாதிரியை பெற்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

பணச் சலவை சட்டத்தின் கீழ் நடத்தப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் கையெழுத்து மாதிரியை பெற்று விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக 30 கோடி ரூபாவுக்கும் மேல் சம்பாதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

விசாரணைகளுக்காக சஜின் வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பணிப்பாளர்கள், கணக்காய்வாளர்களிடம் வாக்குமூலங்களை பெறவேண்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரின் கையெழுத்து மாதிரியை பெற்று விசாரணை நடத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.