அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிணை நிபந்தனைகளை தளர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று(28) மேற்குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணை நிபந்தனைக்கு அமைய ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையாகுமாறு தனக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜின் வாஸ் குணவர்தன மோசன் மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த கொண்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க, பிணை நிபந்தனையை தளர்த்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு சஜின் வாசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.