முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று(30), ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.