சஜினுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.. (UPDATE)

கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 5ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சஜின் வாஸ் மீண்டும் கைது

வர்த்தகரொருவரிடம் பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.