சட்டத்தரணிகள் நுவன் மற்றும் கீர்த்திரத்ன கைது

சட்டத்தரணி நுவன் போபகே மற்றும் கீர்த்திரத்ன பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதொடமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக கடந்த 27ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே, நேற்று நள்ளிரவு அளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், குறித்த இவர்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.