சட்டமா அதிபர் , கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத் , தனக்கு பிணை கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்ப மனு இன்று(02) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.
(rizmira)