சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய நியமனங்களுக்கு எதிராக கம்மன்பில வழக்கு

சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய நியமனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டே கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்துத் தெரிவிக்கையில், சட்ட மா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் சட்ட விரோதமானவை எனவும், அரசியல் சாசனத்தின் 41(இ)(6) மற்றும் 41(ஆ) 41(ஏ) ஆகிய சரத்துக்களின் அடிப்படையிலேயே குறித்த நியமனங்கள் சட்டவிரோதமானது.

இன்னும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய நியமனங்கள் சட்ட விரோதமானவை.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய திறமையான கௌரவமான ஒரு கனவான். தனிப்பட்ட ரீதியில் அவர் பற்றி எமக்கு எவ்வித விரோதமும் கிடையாது.

எனினும் அரசியல் மயப்படுத்தப்பட்ட அடிப்படையில் சட்டமா அதிபர் பதவி வெற்றிடம் நிரப்பப்பட்டமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.