2018 மார்ச் மாதம் 24ம் திகதி முதல் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வெளிநாடு செல்லவுள்ளதால் அவர் நாடு திரும்பும் வரையில், பதில் அமைச்சராக முதன்மை தொழிற்துறை அமைச்சர் தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
-Rishma