சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 500 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 500 சிகரெட்டுக்களுடன் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.