சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருபோரை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை..

(FASTNEWS | COLOMBO) – சட்டவிரோதமாக நாட்டில் தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முறையான விசா அனுமதிப் பத்திரமின்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதனைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எச்.எம்.ஹலீமுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியுள்ள அனைவரையும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.