சட்டவிரோதமாக 1800 லீற்றர் டீசலை கொண்டு செல்ல முற்பட்ட 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வாழைச்சேனை கடற்றொழிலாளர் துறைமுக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெறப்பட்ட 1800 லீற்றர் டீசலை லொரி மூலம் காத்தான்குடிக்கு கொண்டு செல்ல முற்பட்ட 7 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்முனை மற்றும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என வாழச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.குமாரசிங்க தெரிவித்துள்ளார் .

டீசலை இவ்வாறு எடுத்துச் செல்வதற்கான உரிமம் அவர்களிடம் இல்லாததால், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இவர்கள் டீசலை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.