சட்டவிரோத பொலித்தீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு…

பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உணவு வகைகள் பொதிக்காக பயன்படுத்தும் பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து பயன்பாட்டுக்கு தகுதியற்ற சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 05 டொன் பொலித்தீன் கண்டெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்..

குறித்த தொழிற்சாலையின் உரிமையாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.