சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் கைது…

பொகவந்தலாவ மாவெளி வனபகுதியில் சட்டவிராதேமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 18 பேர் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை விஷேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 18 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட 18 நபர்களும் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.